search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இனம் தெரியாத வைரஸ்"

    மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக பரவி வரும் மர்ம வைரஸ் காய்ச்சலால் 64 பேர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது. #indoreunknownvirus

    இந்தூர்:

    மத்தியபிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், கடந்த 4 மாதங்களில் அம்மாநிலத்தில் 64 பேர் பலியாகியுள்ளனர். இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள், போபாலில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    போபால் வைரஸ் ஆய்வு மையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மொத்த மாதிரிகளில், 39 பேர் பன்றி காய்ச்சலாலும், 350 பேர் டெங்கு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் 64 பேரை கொன்ற வைரஸ் எந்த வகை வைரஸ் என்பது கண்டறியப்படவில்லை எனவும் கூறினர்.

    மத்திய பிரதேசத்தில் 72 பேர் ஏற்கனவே பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக ஐடிஎஸ்பி அமித் மலாக்கர் கூறுகையில், ‘ஆண்டுதோறும் பன்றிக் காய்ச்சலுக்கான வைரஸ் மரபணுக்கள் மாற்றம் அடைந்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த  மருந்துகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 2015-ம் ஆண்டு காலிபோர்னியா பன்றிக் காய்ச்சல், ஹெச்1என்1 இறப்பு முதல் முறையாக பதிவு செய்யப்பட்டபோது பெயரிடப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிச்சிகன் ஹெச்1என்1 இன்ஃப்ளூஜென்ஸா என புதிய வகை வீரியமிக்க வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கிடையில் இந்த 64 நோயாளிகளின் மாதிரிகளில் காணப்படும் வைரஸ், பொதுவான காய்ச்சலுக்கான இயல்பு  கொண்டது. இருப்பினும், வைரஸ் வகை இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

    இந்நோயாளிகள் கடுமையான குளிர் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது. பன்றிக் காய்ச்சலைப் போல இந்நோயும் நோய் எதிர்ப்பு சக்தியை கடுமையாக தாக்கி , இறப்புக்கு வழிவகுக்கிறது. மேலும், இது ஹெச்2என்3 எனும் புதிய தொற்றாகவும், இதற்கு அளிக்கப்படும் பன்றிக் காய்ச்சலுக்கான மருந்துகள் வீரியம் குறைவாகவும் உள்ளது’ என கூறினார்.

    இதுவரை 510 பேர் ஹெச்1என்1 ஆல் தாக்கப்பட்டு பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 39 பேருக்கு இந்நோய் உள்ளது. இன்னும் 16 பேரின் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #indoreunknownvirus  
    ×